search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோமாரி தடுப்பூசி முகாம்"

    • கால்நடைகளுக்கு 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி நாளை(புதன்கிழமை) முதல் 21 நாட்கள் நடைபெற உள்ளது.
    • அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 3-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி நாளை(புதன்கிழமை) முதல் 21 நாட்கள் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 லட்சத்து 31 ஆயிரத்து 124 கால்நடை களுக்கும், 100 சதவீதம் முழுமையாக தடுப்பூசி போடப்பட உள்ளது.

    இந்த பணிக்காக மாவட்டம் முழுவதும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்டு 105 தடுப்பூசி குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்க ளுக்கும் நேரில் சென்று அந்தந்த கிராமங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    எனவே, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர், மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை அழைத்துச் சென்று மார்ச் 1ம் தேதி முதல், ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடப்பட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் முகாம்களில் தங்களது கால்நடைகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி தவறாது போட்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×